நரிக்குடி : நரிக்குடி வட்டாரத்தில் மாயமான வி.ஏ.ஓ.,க்களை விவசாயிகள் பல நாட்கள் தேடி கண்டுபிடித்து ஆவணங்களில் கையெழுத்து பெறும் அவலம் நீடிக்கிறது.
கிராமங்களில் தங்கி அலுவலக பணிகளை வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொள்ள வேண்டும். வி.ஏ.ஓ.,க்கள் சிலர் நகரங்களில் வாடகைக்கு ரூம் எடுத்து தங்குகின்றனர்.இவர்களின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் விவசாயிகள், மாணவர்கள் தங்களின் வி.ஏ.ஓ.,க்களை பல நாட்கள் தேடி கண்டுபிடித்து ஆவணங்களில் கையெழுத்து பெறும் அவலம் நீடிக்கிறது.பட்டா, சிட்டா, அடங்கல், விளைச்சல் உள்ளிட்ட தகவல்களை உயரதிகாரிகளிடம் வி.ஏ.ஓ.,க்கள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். எனினும் சிலர் மெத்தனமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. தட்டிக்கேட்டால் சங்கம் மூலம் எதிர்ப்பார்கள் என உயரதிகாரிகள் கப்சிப் ஆகி விடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் கடிவாளம் போட வேண்டும்.