அவிநாசி:பத்து மாதங்களுக்கு பிறகு, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல், குடிநீர் தொட்டி, கழிப்பறை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை தினமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளியில், துாய்மை பணியாளர் பணியிடம் நிரப்பப்படாததால், உள்ளாட்சிகளில் உள்ள துாய்மை பணியாளர்களே, இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''பெரும்பாலான உள்ளாட்சிகளில், துாய்மை பணியாளர் குறைவாக தான் உள்ளனர். ஊராட்சிகளில், ஓரிரு துாய்மை பணியாளர் மட்டுமே உள்ளனர். குடியிருப்பு பகுதியில் துாய்மை பணி மேற்கொள்வதில் சுணக்கம் ஏற்படுகிறது. அரசு பள்ளிகளுக்கு துாய்மைப்பணியாளர் நியமிக்க வேண்டும்'' என்றனர்.