அவிநாசி:அவிநாசியில் வேளாண் விரிவாக்க மையத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் சண்முகம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று, கருத்துகளை முன்வைத்தனர்.''வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ஆட்டையாம்பாளையம், பாரதி நகரில் பழுதடைந்த மின்கம்பங்கள் அதிகளவில் உள்ளன. அதிகளவில், சிறு தொழிற்கூடங்கள், குடியிருப்புகள் பெருகியுள்ளன. சீரான மின் சப்ளை இல்லாததால், சிறு தொழில் செய்வோர் பாதிக்கின்றனர்.வேலாயுதம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நான்காவது குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், ரோடு சிதிலமடைந்து, அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது; ரோட்டை சீரமைக்க வேண்டும்' என கூறினர்.