புறவழிச்சாலைக்கு கல் நடும் பணி தீவிரம்: போக்குவரத்து நெரிசலுக்கு விமோசனம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
00:39

அன்னுார்:கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில், அன்னுார் அடுத்த பட்டக்காரன் புதுார் பிரிவில், புறவழிச் சாலைக்கு கற்கள் நடப்பட்டுள்ளன.தமிழகத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்றாக என்.எச். 209 உள்ளது. இதில் கோவை சத்தி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.


இந்தப் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, 25 ஆண்டுகளாக அன்னூர், புளியம்பட்டி மக்கள் கோரி வருகின்றனர்.கடந்த, 2019ல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவின்பேரில், தனியார் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்தது. கோவில்பாளையத்திற்கு, மேற்கே இரண்டு கி.மீ., தொலைவில் துவங்கி, அன்னூர், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடக எல்லை வரை 98 கிலோ மீட்டர் துாரத்திற்கு புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 60 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்பட உள்ளது.சில இடங்களில் ஏற்கனவே உள்ள சாலையை அகலப்படுத்தியும், பெரும்பாலான இடங்களில் புதிய புறவழிச் சாலை அமைக்கவும் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு மாவட்டத்தில் இதற்காக 731 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டி உள்ளது.இதில் குரும்பபாளையம், அன்னுார், புளியம்பட்டி, சத்தி ஆகிய நான்கு இடங்களில் புறவழிச் சாலை அமைய உள்ளது. நிலம் கையகப்படுத்த 620 கோடி ரூபாய் செலவாகும். மொத்த மதிப்பீடு ஆயிரத்து 200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.விரிவான திட்ட அறிக்கை, கடந்த மார்ச் மாதம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.இரு வாரங்களுக்கு முன் எஸ்.எஸ்.குளம் ஒன்றியம், கொண்டையம்பாளையம் ஊராட்சியில் கற்கள் நடும் பணி நடந்தது. 'ட்ரோன்' கேமரா வாயிலாக சாலை அளவீடு செய்யப்பட்டது.


அன்னூர் அடுத்த காரேகவுண்டன்பாளையம் ஊராட்சியிலும் கற்கள் நடப்பட்டன.அன்னூரில் இருந்து சிறுமுகை செல்லும் சாலை, ஓதிமலை சாலை மற்றும் சத்தி சாலையில், எந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது என அன்னூர் வட்டார மக்கள் ஆர்வமாக தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய அலுவலகத்தில் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் விசாரித்த வண்ணம் இருந்தனர்.இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் அன்னுார் சிறுமுகை சாலையில், கவுண்டம்பாளையம் காலனி முடியும் இடத்தில், கற்கள் நடப்பட்டுள்ளன.


ரோட்டின் வடக்கே ஒரு கல்லும் ரோட்டுக்கு தென்மேற்கில் ஒரு கல்லும் 400 அடி இடைவெளியில் நடப்பட்டுள்ளன.இதேபோல் அன்னூரில் இருந்து சத்தி செல்லும் பாதையில், பட்டறை பஸ் ஸ்டாப்புக்கும் பசூர் பஸ் ஸ்டாப்புக்கும் இடையில் உள்ள பட்டக்காரன் புதூர் பிரிவில் ஒரு கல் நடப்பட்டுள்ளது. அதிலிருந்து 400 அடி தொலைவில் மேற்கே பட்டக்காரன் புதூர் ரோட்டில் மற்றொரு கல் நடப்பட்டுள்ளது.


எனவே கோவில்பாளையத்தை அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி அன்னுார் அடுத்த பட்டக்காரன் புதுார் பிரிவில் புறவழிச்சாலை முடிவடைவது உறுதியாகியுள்ளது. 20 ஆண்டுகாலமாக போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் அன்னூர் மக்களுக்கு கற்கள் நடும் பணி மகிழ்ச்சி தந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X