சிவகங்கை:தினமலர் செய்தி எதிரொலியாக அரசு போக்குவரத்து கழக தொழில்நுட்ப மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு நிர்ணயித்த இலக்கிற்கு மேல் பஸ்களை இயக்கினால் ஊக்கத்தொகை வழங்கப்படும். தினமும் ரூ.50க்கு அதிகமாக ஊக்கத்தொகை பெற்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தினமும் ரூ.6 மட்டுமே வழங்கப்பட்டது.
தீபாவளி முதல் 90 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஊக்கத்தொகை முறையாக கிடைக்கவில்லை. இதுகுறித்து ஜன.,18 அன்று தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கும்பகோணம் கோட்டத்தில் தினசரி ஊக்கத்தொகையை ரூ.23, சென்னை கோட்டத்தில் ரூ.20 ஆக உயர்த்தி அரசு போக்குவரத்து கழகம் வழங்கியுள்ளது.