கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெற்றோர், ஆசிரியர் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.விழாவில், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., சண்முகம் பங்கேற்று, 11ம் வகுப்பு படிக்கும், 210 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.