சத்திரம் வீதியில் தடுமாறும் வாகனங்கள்: மாற்றுத்திட்டம் செயல்படுத்த ஓட்டுனர்கள் வலியுறுத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
01:14

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - உடுமலை ரோடு, சத்திரம் வீதி அருகே மூன்று ரோடு சந்திப்பு பகுதியில், வாகனங்கள் திருப்பி விடப்படுவதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சி தேர்நிலையம் அருகே சத்திரம் வீதி, ஆர்.ஆர்., தியேட்டர் ரோடு மற்றும் உடுமலை ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. சத்திரம் வீதியில் இருந்து வரும் வாகனங்கள், உடுமலை ரோடு, ஆர். ஆர்., தியேட்டர் ரோட்டுக்கு நேரடியாக சென்று வந்தன.விபத்து அபாயம்ரோடு விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், சத்திரம் வீதியில் இருந்து வரும் வாகனங்கள், அரசு மருத்துவமனை அருகே சென்று, சுற்றி வர அறிவுறுத்தப்படுகிறது. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதே போன்று, சத்திரம் வீதிக்கு திரும்பும் வாகனங்கள், தேர்நிலையம் அருகே சென்று சுற்றி செல்கின்றன.அரசு மருத்துவமனை அருகே, வாகனங்கள் சுற்றி செல்லும் பகுதியில், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் திரும்பும் இடத்தில், தற்போது குழி தோண்டப்பட்டுள்ளதால் அச்சத்துடன் பயணிக்கின்றனர். அரசு மருத்துவமனை வரை சென்று திரும்பும் போது, எதிரில் வேகமாக வரும் வாகனங்களால், ஓட்டுனர்கள் அச்சத்துடன் ரோட்டை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வாகன ஓட்டுனர்கள் கவனமின்றி செல்வதால் விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. தற்போது ரோடு விரிவாக்கப்பணிகள் முடிந்ததும், தபால் நிலையம் அருகே ரவுண்டனா அமைக்கப்படுகிறது.வாகன ஓட்டுனர்கள் கூறுகையில், 'ரோடு விரிவாக்கப்பணி முடிந்ததும் சத்திரம் வீதியில் இருந்து செல்லும் வாகனங்கள், தபால் நிலையம் வரை சென்று திரும்ப வேண்டிய நிலை ஏற்படும் அல்லது அரசு மருத்துவமனை அருகே ரோட்டை கடந்து செல்ல வழி இருந்தால் அவ்வழியாக கடக்க வேண்டிய நிலை உருவாகும்.ஆர்.ஆர்., தியேட்டர் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், தேர்நிலையம் அருகே அமைக்கப்படும் ரவுண்டனாவில் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கு மாற்றாக திட்டம் செயல்படுத்தினால் பயனாக இருக்கும்,' என்றனர்.மாற்றி யோசிக்கணும்!சத்திரம் வீதி வரும் வாகன ஓட்டுனர்கள், அரசு மருத்துவமனை அல்லது தபால் நிலையம் வரை சென்று திரும்புவதற்கு பதிலாக, மார்க்கெட் பகுதியில் இடம் கையகப்படுத்தி, சிறு ரவுண்டானா அமைத்து திரும்பிச் செல்ல வழிவகை செய்யலாம், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X