உடுமலை:உடுமலையில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் பூங்கொடி தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் எல்லம்மாள், சித்ரா தேவி, செயற்குழு உறுப்பினர் லட்சுமாத்தாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மடத்துக்குளம்தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தலைவர் கன்னித்தாய் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.