கோவை:கோவை சீரநாயக்கன்பாளையம் ராதாகிருஷ்ணன் வீதியை சேர்ந்தவர் மோகன், 58. கோவை சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள கரும்பு இனப்பெருக்க மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பீல்டு அலுவலராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் பணிக்கு சென்ற மோகன், மாலை வீடு திரும்பவில்லை. அவரது மகன் மோகனை பல்வேறு பகுதிகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. தொண்டாமுத்துார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், வேடபட்டி புதுகுளத்தில் மோகன் உயிரிழந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.