பழநி:பழநி முருகன் கோவில், தைப்பூசவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தைப்பூச நாளான வரும், 28ல் தேரோட்டம் நடைபெறும்.பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா, பெரியநாயகியம்மன் கோவிலில் இன்று காலை, 7:00 மணிக்கு மேல், கொடியேற்றதுடன் துவங்குகிறது. முன்னதாக வள்ளி - தேவசேனா சமேதமாக, முத்துக்குமார சுவாமி கொடி கட்டி மண்டபத்தில் எழுந்தருள்வார்.விழா நடைபெறும், 10 நாட்களும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, 27ல் திருக்கல்யாணம், ௨8ம் தேதி மாலை, 4:30 மணிக்கு மேல், தைப்பூச தேரோட்டம் நடைபெறும்.பத்தாம் நாளான, ௩௧ம் தேதி, தெப்ப திருவிழாவிற்கு பின் இரவு, 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் விழா நிறைவடையும். ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிராந்தி குமார்பாடி செய்து வருகிறார்.தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் காவடிகள், அலகு குத்தியவாறு பாதயாத்திரையாக கோவிலுக்கு தொடர்ந்து வருகிறார்கள்.