கோவையில் 'ஹவாலா' கொள்ளை கேரளாவின் 4 கும்பல் தொடர்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் 'ஹவாலா' கொள்ளை கேரளாவின் 4 கும்பல் தொடர்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
02:08

கோவை:சமீப காலமாக கோவையில் அதிகரித்துள்ள கார் கடத்தல் மற்றும் ஹவாலா பணம் கொள்ளையில், கேரளாவை சேர்ந்த நான்கு கும்பல் ஈடுபட்டுள்ளது, தெரியவந்துள்ளது.



கடந்த, ஜன., 11ம் தேதி, கோவை மதுக்கரை மரப்பாலம் அருகே, கார் டிரைவரை தாக்கி விட்டு அவரிடமிருந்து, 10 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்து சென்றது. கால்டாக்ஸி டிரைவர், பாலக்காடு மாவட்டம், மண்ணார்காட்டை சேர்ந்த முகமது முஸ்தபா, 34, மதுக்கரை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.விசாரணையில், கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.



கோவை ரூரல் எஸ்.பி., அருளரசு கூறியதாவது:கேரள மாநிலம் ஆலப்புழா, கண்ணுார், மலப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து செயல்படும், நான்கு கும்பல்கள் வாகனங்களை வழிமறித்து ஹவாலா பணத்தை கொள்ளையடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. ஆலப்புழாவில் உள்ள கும்பல் தான், மதுக்கரை மரப்பாலத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது.



கோவை - திருச்சூர் இடையே உள்ள, 200 கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப் பட்டதில், இது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.மேலும், கடந்த, டிச., 25ம் தேதி, கோவை நவக்கரையில் காரில் கடத்தி வரப்பட்ட ஹவாலா பணம், 27.5 லட்சம் ரூபாயை, கேரள கும்பல் கொள்ளையடித்தது.



காரில் ரகசிய அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 90 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இவ்வழக்கில், ஆறு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.ஹவாலா பணம் குறித்து விசாரிக்க, வருமான வரித்துறை மற்றும் அமலாக்க துறைகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இது குறித்து விசாரிக்க சிறப்பு அலுவலரை, அமலாக்கத்துறை நியமித்துள்ளது. வழக்கு குறித்த ஆவணங்களை அமலாக்க துறை சிறப்பு அதிகாரியிடம் விரைவில் வழங்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X