திருப்பூர்:'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையை வழங்க விரைவில் நிதி ஒதுக்கப்படும்' என்று கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறினார்.
திருப்பூரில் 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில், 'உடுமலை, அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம், தாங்கள் வழங்கிய கரும்புக்கான பணத்தை, விரைவில் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் பலர், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் விஜயகார்த்திகேயனிடம் கேட்டபோது,''கரும்பு விவசாயிகளுக்கான பாக்கி தொகையை விடுவிக்க வேண்டுமென, ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம்; விரைவில் நிதி ஒதுக்கப்படும்,'' என்றார்.