பல்லடம்:'திருச்சிற்றம்பலம் என்ற சிவநாமத்தை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,'' என, காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறினார்.
சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் சிவநாமத்தை இழிவுபடுத்தும் விதமாக, சமூக வலைதளத்தில், கருத்து பதிவிட்டுள்ளார். இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமி கூறுகையில், ''சைவர்களும், சிவனடியார்களும் அனுதினமும் போற்றி வணங்கும், 'திருச்சிற்றம்பலம்' எனும் சிவ நாமத்தை, ஒருவர், தரக்குறைவாக விமர்சித்து விளம்பரம் தேட முயன்றுள்ளார்.
மத நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் இதுபோன்ற நபர்களை, வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்றவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து, தக்க தண்டனை வழங்க வேண்டும்,'' என்றார்.