திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், நேற்று, 38 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. குணமான, 38 பேர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். மொத்த பாதிப்பு, 17 ஆயிரத்து, 639 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை, 17 ஆயிரத்து, 239 பேர் குணமாகி, வீடு திரும்பியுள்ளனர்; 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 220 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.