ஊட்டி:ஊட்டி- மஞ்சூர் சாலையில், காந்திபேட்டையில் சாலை குறுகலாக இருந்தது. பிரதான இச்சாலையில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டது. 'பிரதான இச்சாலையை அகலப்படுத்த வேண்டும்,' என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையை ஆய்வு செய்து, நிதி ஒதுக்கீடு செய்து, 10 அடி வரை சாலை அகலப்படுத்தப்பட்டது. இதனால், எதிரே வரும் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகின்றன.