கோத்தகிரி:கோத்தகிரி ஹில்போர்ட் பள்ளி மற்றும் பாக்கிய நகர் அரசு பள்ளி மாணவியர், அறிவியல் ஆய்வு கட்டுரை போட்டியில் சாதித்தமைக்காக, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.அண்மையில் இணையவழியில் அறிவியல் ஆய்வு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. அதில், கோத்தகிரி ஹில்போர்ட் பள்ளி மாணவியர் நிகிதா மற்றும் ரமணாதேவி ஆகியோர் தயாரித்த 'தாவர இனங்கள்' என்ற கட்டுரை; கட்டபெட்டு பாக்கிய நகர் அரசு நடுநிலை பள்ளி மாணவியர் அபிநயா மற்றும் மோனிஷா ஆகியோர் தயாரித்த, 'சிறுதானியங்களும் ஊட்டச்சத்தும்' என்ற கட்டுரையும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சாதித்த மாணவியருக்கு, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஆசிரியர் ராஜூ மற்றும் ஹில்போர்ட் பள்ளி தாளாளர் ரவிக்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.