பந்தலுார்:பந்தலுார் அருகே, அத்திமாநகர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள். இவர் நேற்று மதியம் வீட்டிற்கு அருகே உள்ள புதரில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த சிறுத்தை ஒன்று ஒரு கிடா ஆட்டை இழுத்து சென்றுள்ளது. திரும்பி வந்த சிறுத்தை இரு ஆடுகளை கடித்து கொன்றுள்ளது. இந்த அச்சமடைந்த செல்லம்மாள் சப்தம் எழுப்பியதால், சிறுத்தை அங்கிருந்து ஓடி உள்ளது. தேவாலா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு கொண்டனர். தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.