மதுரை : வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை பாலசுப்பிரமணியன்28. அதே பகுதி உறவினர் வீட்டிற்கு 2013ல் பிள்ளையார் நத்தம் வயலுாரைச் சேர்ந்த மோகன தீபா24, வந்தார். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, மானபங்க முயற்சியில் பாலசுப்பிரமணியன் ஈடுபட்டார். மனமுடைந்த மோகன தீபா தற்கொலை செய்தார். தற்கொலைக்குத் துாண்டியதாக பாலசுப்பிரமணியன் மீது வாடிப்பட்டி போலீசார் வழக்குப் பதிந்தனர். அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மகளிர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் உத்தரவிட்டார்.