போலீஸ் செய்திகள்.
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
03:46

குண்டர் சட்டத்தில் கைது



மதுரை: கருப்பாயூரணி ராஜபாண்டி என்ற நடுக்கா 23, கவுதம் என்ற மண்டையன் 24. இவர்கள் மீது கொலை வழக்கு உள்ளது. இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார்.



ரூ.7.20 லட்சம் மோசடி



மதுரை: நாயக்கர் புதுத்தெரு சார்லஸ் ஜான் கென்னடி.இவருக்கு சிங்கப்பூரில் பார் வைக்க ஏற்பாடு செய்வதாக கூறி, சென்னை பர்மா காலனி கிச்சா ரமேஷ், மனைவி ேஷாபா ரூ.7.20 லட்சம் பெற்று மோசடி செய்தனர். திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.



மருத்துவமனையில் திருட்டு முயற்சி



மதுரை: ஒத்தக்கடையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு கதவை உடைத்து மர்மநபர் நுழைந்துள்ளார். பொருட்கள் ஏதும் திருடுபோகவில்லை. போலீசார் விசாரிக்கின்றனர்.



வாலிபர் கொலை



வாடிப்பட்டி : ராமநாயக்கன்பட்டி நாகராஜ் மகன் ரகுராஜ் 25, டிரைவர். கருப்பட்டி ராஜேஷூடன் முன் விரோதம் இருந்தது. ஜன.,17 டூவீலரில் சென்ற ரகுராஜை வாடிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் அருகே ராஜேஷ்குமார், முருகன், சுரேஷ் வழிமறித்து கத்திரிகோலால் குத்தினர். காயமடைந்தரகுராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.



பைக், வேன் மோதல்: ஒருவர் பலி



உசிலம்பட்டி: வி. காமாட்சிபுரம் பாண்டி மகன் சேதுபதி 19. அய்யனார்குளம் தர்மர் மகன் தவப்பாண்டி 18. இருவரும் பைக்கில் (ஹெல்மெட் அணியவில்லை) உசிலம்பட்டி நோக்கி வந்தனர். கீழப்புதுார் எல்.ஐ.சி., அலுவலகம் அருகில் எதிரே வந்த லோடுவேன் மோதியது. சேதுபதி பலியானார். தவப்பாண்டி காயமுற்றார். போலீசார் விசாரிக்கின்றனர்.



நான்கு வழிச்சாலையில் வழிப்பறி



திருமங்கலம்: நான்குவழிச்சாலை பைபாஸ் ரோடு கரிசல்பட்டி பாலம் அருகே அருப்புக்கோட்டை தனியார் நிறுவன ஊழியர் ரமேஷ் 22, டூவீலரில்நின்றார். டூவீலரில் சென்ற அடையாளம் தெரிந்த 3 நபர்கள்,போன் செய்ய வேண்டும் என அவரிடமிருந்த அலைபேசியை பறித்து தப்ப முயன்றனர். அவர்களை பிடிக்க முயன்ற ரமேைஷ தாக்கி ஒரு பவுன் தங்க செயினையும் பறித்து தப்பினர். நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X