உசிலம்பட்டி : உசிலம்பட்டி கவணம் பட்டியில் வீடு முன் விளையாடிய தீபன் மகள் மைதிலியை 2, நாய் கடித்து குதறியது. இதில் சிறுமியின் வலது பக்க கன்னம், தொடையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி செய்து பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளன.இவற்றை கட்டுப்படுத் தவும், நாய்களுக்குதடுப் பூசி போடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியு றுத்தினர்.