மதுரை : தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் பணிபுரிய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் விண்ணப்பிக்கலாம். சீனியர் ஆபீசர் டெக்னிக்கல் பிரிவுக்கு பி.இ., பி.டெக்கில் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வங்கி, தொழில், நிதி நிறுவனங்களில் மூன்றாண்டு பணி அனுபவம் தேவை.
சீனியர் ஆபீசர் பைனான்ஸ் பிரிவுக்கு சி.ஏ., ஐ.சிடபிள்யூஏ அல்லது எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும். வங்கி, தொழில்நிறுவனம், நிதி நிறுவனங்களில் ஓராண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.சம்மர் ஒலிம்பிக், காமன் வெல்த், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன், காமன்வெல்த் சாம்பியன், ஏசியன் சாம்பியன்ஷிப், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டு, பாரா ஒலிம்பிக் , ஏசியன் பாரா ஒலிம்பிக், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு, காது கேளாதோர் விளையாட்டு, தேசிய விளையாட்டு, தேசிய சாம்பியன் விளையாட்டில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் விண்ணபிக்கலாம். ஜன. 30க்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.