பேரையூர் : பேரையூரில் போக்குவரத்து மிகுந்த ரோடுகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் நான்கு, இரு சக்கர வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.
இங்கு உசிலம்பட்டி ரோடு, பஜார் தெரு, ஜவஹர் தெரு, அரண்மனை வீதி, முக்குசாலை, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் காய்கறி, பலசரக்கு மொத்த வியாபாரம், வணிக வளாகங்கள் உள்ளன. மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இப்பகுதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால் நெரிசல் ஏற்படுகிறது. முறையின்றி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.