இடமலைக்குடிக்கு ரேஷன் பொருட்கள் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு | தேனி செய்திகள் | Dinamalar
இடமலைக்குடிக்கு ரேஷன் பொருட்கள் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:37

மூணாறு : மூணாறு அருகே இடமலைகுடி ஊராட்சியில்வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரேஷன்பொருட்கள் உட்பட சலுகைகள் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.



இங்கு 26 குடிகளில் (கிராமம்) வசிக்கும் மலைவாழ் மக்கள் பட்டினி சாவு உட்பட பல்வேறு துயரங்களை அனுபவிப்பதாக கேரள உயர்நீதிமன்றத்திற்கு தகவல் கொண்டு செல்லப்பட்டதால் நீதிமன்றம் தாமாகவழக்கு பதிவு செய்தது.மலைகளை தாண்டி கிராமங்களுக்குச் செல்ல பல்வேறு சிக்கல்உள்ளதால் ரேஷன் பொருட்கள் வினியோகமும் பாதிப்பதாக இடுக்கி சட்ட சேவை வாரியம் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.ரேஷன்வினியோகத்தை வழங்கல்துறை உறுதி செய்யும் எனவும், அதற்கானசெலவை மலைவாழ் மக்கள் நலத்துறை ஏற்றுள்ளதாகவும் இடுக்கி கலெக்டர் 2018 ல் அறிக்கை தாக்கல் செய்தார்.இடமலைகுடியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு ரேஷன் உட்பட சலுகைகள் தடையின்றி கிடைப்பதை அரசு உறுதி படுத்த வேண்டும்' என தலைமை நீதிபதி மணிகுமார், நீதிபதி ஷாஜி பி. ஷாலி ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.------------

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X