மூணாறு : கேரளா மூணாறில் மழை, கொரோனாவால் முடங்கிய ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் மீண்டும் துவங்கின.
மூணாறுநகர், இக்கா நகர்,காலனி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டைபோக்கும் வகையில் நகரையொட்டிகன்னியாற்றின் குறுக்கே நீர்வளத்துறை சார்பில் இரண்டு தடுப்பணைகள் ரூ.3.52 கோடி செலவில் கட்டப்படுகிறது. அதற்கான பணிகள் 2019 துவங்கியபோதும் தென்மேற்கு பருவ மழை , 2020ல்கொரோனா பரவல் காரணமாக முடங்கின.தடுப்பணையின்தண்ணீரை அருகில் உள்ள மலையில் அமைக்கப்படும்நீர் தேக்க தொட்டியில்சேமித்துசுத்திகரித்து குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் நீர் வரத்து மற்றும்கொரோனா பாதிப்பு குறைந்ததால் தடுப்பணை கட்டும் பணிகள் மீண்டும் துவங்கின.'' இத்திட்டம் மார்ச் 31க்குள்முடிக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்படும்.அதன் மூலம் 5 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுவார்கள்,''எனநீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஜோஸ் ஸ்கரியா தெரிவித்தார்.