தேனி : தேனியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு டூவீலர்களில் 'ஹெல்மெட்' அணிந்து செல்லும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
எஸ்.பி., அலுவலக வாயில் அருகே ஊர்வலத்தை சாய்சரண்தேஜஸ்வி எஸ்.பி., துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் ராஜேந்திரன், சங்கரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தர்மானந்தம், தேனி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் முகமது மீரான், தேனி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். அங்கிருந்து ஊர்வலம் அரண்மனைப்புதுார் விலக்கு, பங்களாமேடு, நேருசிலை சிக்னல், பெரியகுளம் ரோடு, அல்லிநகரம் சாலைப்பிள்ளையார் கோயில் வழியாக அன்னஞ்சியில் முடிந்தது. பொதுமக்கள், போலீசார் ஏராளமானோர் பங்கேற்றனர்.