சின்னமனுார் : சின்னமனுார் நகராட்சிக்கு கூடுதல் குடிநீர் தேவைப்படுவதால் புதிய திட்டம் தயார்செய்து அமல்படுத்த நிர்வாகம் மதிப்பீடு தயாரிக்க வேண்டும்.
இந்நகராட்சி 20 ஆண்டுகளுக்கு முன்பே குடிநீர் வடிகால்வாரியத்திடமிருந்து விலகி சொந்தமாக முல்லைப் பெரியாற்றில் உறைகிணறு அமைத்து நகருக்குள் சுத்திகரிப்பு நிலையம் மூலம் முறையாக குடிநீர் வினியோகத்தை மேற்கொண்டது. ஆனால் மக்கள்தொகை தற்போது அதிகரித்துள்ளது. 27 வார்டுகளில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் வரை உள்ளனர். விரிவாக்க பகுதிகள் அதிகரித்து வருகிறது.
ஆனால் 20 முதல் 30 லட்சம் லிட்டர் மட்டுமே பம்பிங் செய்யப்படுகிறது. இதனால் நகரில் பல இடங்களில் வாரம் ஒரு முறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஒத்தவீடு, அய்யனார்புரம், பொன்னநகர், காந்திநகர்காலனி போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் நீடிக்கிறது. எனவே சின்னமனுாருக்கு புதிய குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடுகள் தயார் செய்து அரசு அனுமதிபெற்று விரைந்து அமல்படுத்த நகராட்சி முன்வர வேண்டும்.