வில்லியனுார்; அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் பியூச்சர் இந்தியா டிரஸ்ட் இணைந்து ஏவுகணை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.அரியூர் வெங்டேஸ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் பியூச்சர் இந்தியா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் பாதுகாப்பிற்கு உதவ, குறைந்த செலவில் ஏவுகணை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ராமச்சந்திரா கல்வி அறக்கட்டளை சேர்மன் ராமச்சந்திரன் ஆலோசனையில் முதன்மை இயக்க அதிகாரி வித்யா முன்னிலையில் பியூச்சர் இந்தியா டிரஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தனர்.ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கல்லுாரி இளம் விஞ்ஞானிகளை கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன், கல்லுாரி டீன் ஜெயராமன், ஆராய்ச்சி மேம்பாட்டு துறை அதிகாரி அமுதவள்ளி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அதிகாரி ஆனந்த்ராஜ் பாராட்டினர்.