தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 5 பேர் நேற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
புதிதாக 6 பேர் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 620 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. அவை மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்டத்தில் நேற்று மருத்துவக் கல்லுாரி முகாமில் 25 பேர், கம்பம் அரசு மருத்துவமனை முகாமில் 6 பேர், போடி அரசு மருத்துவமனை முகாமில் 68 பேர் என 99 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாம் துவங்கிய நாளில் இருந்து இதுவரை 593 பேருக்கு கொரோனா கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டுள்ளது. முன்களப் பணியில் ஈடுபட்ட போலீசார், துப்புரவுப் பணியாளர்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதனால் உடல் நலக்கேடு ஏற்படாது'' என, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில் தெரிவித்துள்ளார்.