புகார் பெட்டி | செய்திகள் | Dinamalar
புகார் பெட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:40

சிலாப் அமைக்கப்படுமா? தட்டாஞ்சாவடி வி.வி.பி.,நகர் நிழற்குடைகால்வாயில் அகற்றப்பட்ட சிமெண்ட் சிலாப்இன்னும் போடாததால் விபத்து அபாயம் உள்ளது.கலைவாணன், தட்டாஞ்சாவடி.காட்சிப் பொருளான நீருற்று புதுச்சேரி காமராஜர் சாலை தந்தை பெரியார் சிலை சதுக்கத்தில் செயற்கை நீருற்று செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது.யமலி, புதுச்சேரி.விழும் நிலையில் சிலைபாக்கமுடையான்பட்டு கொக்குபார்க் பூங்காவில் உள்ள அன்னை தெரசா சிலை எந்நேரத்திலும் விழும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.இளங்கோ, வினோபா நகர்.சாக்கடையில் அடைப்பு அரும்பார்த்தபுரம் நடுத்தெரு வாய்க்காலில் செடிகள் புதராக வளர்ந்து சாக்கடை அடைத்துக் கொண்டுள்ளது.ஞானமூர்த்தி, அரும்பார்த்தபுரம்.பாம்புகளால் அச்சம் வில்லியனுார் காவேரி நகர் 1-வது மெயின்ரோட்டில் காலிமனைகளில் புதராக இருப்பதால் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.சிவக்குமார், வில்லியனுார்.தாறுமாறாக நிற்கும் வாகனங்கள்புதுச்சேரி பல்கலைக்கழகம் இரண்டாவது மெயின்கேட் வணிக வளாகம் எதிரே தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதால் விபத்து அபாயம் உள்ளது.கபிலன், சின்னக்காலாப்பட்டு. வாகனங்களால் விபத்து அபாயம்பாக்கமுடையான்பட்டு - வினோபா நகர் ஒருவழிச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.சந்துரு, வினோபா நகர்.உடைந்த சிலாப் சரி செய்யப்படுமாதட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி நுழைவு வாயிலில் சிமெண்ட் சிலாப் உடைந்ததால் சாலை குறுகலாகி விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.மகேந்திரன், கரையாம்புத்துார்.குப்பைகளால் சீர்கேடு குருவிநத்தம்-முள்ளோடை சாலையில் இருபுறமும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.அசோகன், குருவிநத்தம்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X