கூடலுார் : குமுளி மலைப்பாதையில் உள்ள குறுகிய பாலத்தையும் சீரமைக்க வேண்டும்.
லோயர்கேம்பில் இருந்து குமுளி வரையுள்ள 6 கி.மீ., துார மலைப்பாதை பல ஆபத்தான வளைவுகளைக் கொண்டதாகும். தமிழக --கேரள எல்லையை இணைக்கும் முக்கிய பாதையாக இருப்பதால் போக்குவரத்து அதிகமாக இருக்கும். பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததால் ஒரு மாதத்திற்கும் மேலாக 30 க்கும் மேற்பட்ட தடுப்புச் சுவர்களும், ஆபத்தான வளைவாக உள்ள கொண்டை ஊசி வளைவில் பாலம் அமைத்து அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில் குமுளி போலீஸ் செக்போஸ்ட் அருகே உள்ள குறுகிய பாலம் மட்டும் அகலப்படுத்தி சீரைமக்காமல் உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் இப்பகுதியையும் சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை ஆணையம் முன்வரவேண்டும்.