புதுச்சேரி; புதுச்சேரியில் பா.ஜ., மலர அட்டவணை இன மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பா.ஜ., தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.புதுச்சேரி பா.ஜ., மாநில எஸ்.சி.,அணி செயற்குழு கூட்டம், தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில எஸ்.சி.,அணி செயலாளர் மணியம்மை வரவேற்றார். துணை தலை வர்கள் கலியமூர்த்தி, சிவக் குமார், ரவி, செயலாளர் சீத்தாபதி, பொருளாளர் ராஜேஸ்வரி, மாநில செயற் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.எஸ்.சி., அணி மாநில தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தேசிய எஸ்.சி., அணி தலைவர் லால் சிங் ஆர்யா, கட்சி மாநில தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர்கள் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர் தங்க விக்ரமன், எஸ்.சி,பொதுச் செயலாளர் அய்யப்பன், பூர்வீக ஆதி திராவிடர் மாநில தலைவர் ராமலிங்கம் வாழ்த்தி பேசினர்.பிரதமர் கொண்டு வந்துள்ள திட்டங்கள் எஸ்.சி.,எஸ்,டி., மக்களுக்கு வளர்ச்சிக்கான திட்டங்களாக உள்ளது. வரும் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.,ஆட்சி மலர அட்டவணை இன மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.