தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ. 1 கோடியில் புதிதாக பாதை அமைகிறது | தேனி செய்திகள் | Dinamalar
தேனி புது பஸ் ஸ்டாண்டில் ரூ. 1 கோடியில் புதிதாக பாதை அமைகிறது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:43

தேனி அல்லிநகரம் நகராட்சி புது பஸ் ஸ்டாண்டிற்கு 600 பஸ்கள் வந்து செல்கின்றன. இங்குள்ள 3 பிளாட்பாரங்களில் 1, 2ல் பயணிகள் நடமாட்டம் அதிகம். 3வது பிளாட்பாரத்தில் பயணிகள் குறைவால் கடைகளில் வியாபாரம் மந்தமாக இருக்கும். இங்குள்ள 20ல், 10 கடைகள் பூட்டியே உள்ளன. கோவை, திருப்பூர், பல்லடம் என நீண்டதுார பஸ்களும் நிறுத்தத்திற்கு வரும் முன்பே நுழைவு வாயிலிலே பயணிகள் இறங்கியும், அதே போல் வெளியேறும் போது ஏறி செல்கின்றனர். பூட்டிய கடைகளை நகராட்சியிடம் ஒப்படைக்க வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.



மதிப்பீடு



தேனி புது பஸ் ஸ்டாண்டிற்குள் தெற்கு, வடக்கு இரு நுழைவு வாயில் வழியாக பஸ்கள் உள்ளே நுழைகின்றன. இதை தடுத்து தெற்கு நுழைவு வாயில் வழியாக மட்டும் பஸ்கள் உள்ளே வரவும், 3வது பிளாட்பாரத்திற்கு செல்ல 2வது பிளாட்பாரம் கடைசியில் தெற்கு பகுதி கழிப்பிடத்தை ஒட்டி ரூ. 1 கோடியில் புதிதாக பாதை அமைக்க மதிப்பீடு செய்துள்ளனர். அரசு அனுமதி கிடைத்ததும் பாதை அமைக்கும் பணி துவங்கும். அதன்பின் அனைத்து பஸ்களும் தெற்கு வாயில் வழியாக நுழைந்து வடக்கு நுழைவு வாயில் வழியாக வெளியேறும் என நகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X