காரைக்கால்; சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு காரைக்காலில் போக்குவரத்து துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன்பு பேரணியை கலெக்டர் அர்ஜூன் சர்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். சீனியர் எஸ்.பி.,நிகாரிகாபட் முன்னிலை வகித்தார். போக்குவரத்து துறை அதிகாரி கலிய பெருமாள் வரவேற்றார். விழிப்புணர்வு பேரணி கலெக்டர் அலுவலகத்திலிருந்து பாரதியார் சாலை, பி.கே.,சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக கலெக்டர் அலுவலகம் வந்தடைந்தது. துணை மாவட்ட ஆட்சியர் ஆதாஷ், எஸ்.பி.,ரகுநாயகம், போக்குவரத்து துறை அதிகாரிகள் கல்விமாறன், குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.