புதுச்சேரி; தேசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க புதுச்சேரி அணியினர் நொய்டா புறப்பட்டனர்.உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தேசிய அளவிலான 65வது ஆண்கள் சீனியர் மல்யுத்த போட்டிகள் நாளை துவங்க உள்ளது. இதற்காக புதுச்சேரி வீரர்களுக்கு, யூனைடெட் புதுச்சேரி அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் ஒரு மாத கால சிறப்பு பயிற்சியை தொழில்நுட்பக் குழுவினர் வழங்கினர்.தேசிய போட்டியில் பங்கேற்க தேர்வாகிய வீரர்கள் நேற்று நொய்டா புறப்பட்டனர். அவர்களுக்கு வழியனுப்பு விழா புதுச்சேரி பஸ் நிலையத்தில் நடந்தது. மல்யுத்த சங்கத்தின் பொதுச் செயலாளர் வினோத் பங்கேற்று வாழ்த்தி வழியனுப்பினார். சங்க துணைச் செயலாளர் தாமோதரன், பொருளாளர் சோமசுந்தரம், பயிற்சியாளர்கள் ஜான், தங்கபாண்டியன், மாரிமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.