காரைக்கால்; காரைக்காலில் கல்வித்துறை அமைச்சர் தொகுதியில் 5ம் வகுப்பு அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அரசுப் பள்ளி மூடப்பட்டது.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு வெப்ப பரிசோதனை செய்து, வகுப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.நேற்று முன்தினம் திருநள்ளாறு தொகுதி வளத்தமங்கலம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் 5ம் வகுப்பு மாணவருக்கு காய்ச்சல் இருந்தது. சுகாதார நிலையத்தில் அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.