குடியரசு தின விழாவையொட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை | செய்திகள் | Dinamalar
குடியரசு தின விழாவையொட்டி போலீசார் அணிவகுப்பு ஒத்திகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:56

புதுச்சேரி; குடியரசு தின விழாவையொட்டி உப்பளம் மைதானத்தில் பல்வேறு பிரிவுகளின் போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.குடியரசு தின விழாவையொட்டி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. குடியரசு தினத்தன்று பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், பல துறைகளின்அலங்கார வண்டி அணிவகுப்பு , போலீஸ் அணிவகுப்பு மரியாதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சி, அலங்கார வண்டி அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.ஐ.ஆர்.பி.என்.,ஊர்க்காவல் படை, சட்டம் ஒழுங்கு போலீஸ் உட்பட பல போலீஸ் பிரிவு அணிவகுப்பு மட்டும் நடக்கிறது.இதற்காக சில தினங்களாக உப்பளம் மைதானத்தில் அணிவகுப்பு ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.குடியரசு தினவிழா ஏற்பாடுகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகள் கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கவர்னர் மாளிகை, சட்டசபை கட்டடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்க, ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X