பயிர் காப்பீட்டு தொகை ரூ.8.98 கோடி விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்கும் | செய்திகள் | Dinamalar
பயிர் காப்பீட்டு தொகை ரூ.8.98 கோடி விவசாயிகளுக்கு விரைவில் கிடைக்கும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
04:56

புதுச்சேரி; பயிர் காப்பீட்டு திட்டத்திற்கான இன்சூரன்ஸ் பிரிமீயம் தொகையை செலுத்துவதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதால், விவசாயிகளுக்கு ரூ.8 கோடியே 98 லட்சம் இழப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க உள்ளது.பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நெற் பயிருக்கு கடந்த 2018 -19ம் ஆண்டில் காப்பீடு செய்யப்பட்டது. இதற்காக விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.1.09 கோடியையும், மாநில அரசு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ரூ.1.57 கோடியையும் சேர்த்து புதுச்சேரி அரசே செலுத்தி விட்டது. மத்திய அரசு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையான ரூ.1.57 கோடி செலுத்தாததால் பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இந்நிலையில், டில்லியில் முகாமிட்டுள்ள முதல்வர் நாராயணசாமி, வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன், நல அமைச்சர் கந்தசாமி ஆகியோர், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமரை நேற்று மாலை சந்தித்து பேசினர். புதுச்சேரி வேளாண் துறை இயக்குனர் பாலகாந்தி உடனிருந்தார்.மத்திய அரசு செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையை உடன் செலுத்துமாறு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கோரினர். இதையேற்ற மத்திய அமைச்சர், துறை உயரதிகாரியை அழைத்து உடன் பணத்தை செலுத்த உத்தரவிட்டார்.இந்த தொகை செலுத்தினால், மகசூல் பாதித்த புதுச்சேரி பகுதிக்கு ரூ.6.54 கோடி, காரைக்கால் பகுதிக்கு 2.44 கோடி உட்பட ரூ. 8.98 கோடி நேஷனல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் வழங்கும்.இந்த தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதன் மூலமாக, 12 ஆயிரம் விவசாயிகள் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X