முதுகுளத்துார் : தினமலர் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டடத்தின் சேதமடைந்துள்ள மேற்கூரையை அகற்றம் செய்தனர்.
முதுகுளத்துார் அருகே திருவரங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொளுந்துரை, செல்லுார், அலங்கானுார், பொசுக்குடி உட்பட அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெறுகின்றனர்.சுகாதார நிலையத்தில்பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள கட்டடத்தை மராமத்து மட்டும் செய்து வந்ததால்ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மேற்கூரையின்சிமின்ட் பூச்சுக்கள் விழுந்து சேதமடைந்துஉள்ளது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், பணியாளர்கள் அச்சப்படுகின்றனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கட்டடத்தின் முன்புறம் சேதமடைந்துள்ள மேற்கூரை அகற்றப்பட்டது.