ராமநாதபுரம் : ராமநாதபுரம் பஜார் எஸ்.ஐ., சிவஞானபாண்டியன் தலைமையில்போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் வெளிப்பட்டினம் அப்துல்பாசித், வீட்டில் ஒரு பண்டல், காட்டுப்பிள்ளையார்கோவில் தெரு நாகராஜ் 58, வீட்டில் 4 பண்டல் குட்கா, 105 சிறிய பண்டல் பீடிகள், ஓம்சக்திநகர் சரவணன் 42, ஒரு பண்டல் புகையிலை என ரூ.1.50 லட்சம். மதிப்புஉள்ள 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். நாகராஜன், சரவணன் கைது செய்யப்பட்டனர். அப்துல் பாசித் தப்பினார்.