ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பஸ்ஸ்டாப் அருகே பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணை மிரட்டி மோதிரம், செயின், கொலுசு உள்ளிட்ட நகைகளை பறித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் அருகே வெண்குளத்தை சேர்ந்தவர் தேவதாசன். இவரது மகள் ஜோனியா 29. இவர் நேற்று மாலை 5:00 மணிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை அருகே நடந்து சென்றார்.அவரை வழிமறித்த 25 வயது வாலிபர் மிரட்டி அரை பவுன் மோதிரம், ஒரு பவுன் செயின், வெள்ளிகொலுசுகளை பறித்து சென்றார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.