ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்டில் எமன் வேடமணிந்தும், பாட்டுப்பாடியும், துண்டு பிரசுரம் வழங்கியும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் தலைமை வகித்து கலை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகமது, மோட்டார்வாகன ஆய்வாளர் இளங்கோ உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.போக்குவரத்து துணை ஆணையர் இளங்கோவன் பொதுமக்கள், டிரைவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசுகையில், 'தலைக்கவசம் குடும்பத்தை காப்பாற்றும். சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்தால் விபத்து இல்லாமல் நீண்ட நாட்கள் வாழலாம், என்றார்.