ராமநாதபுரம் : ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் கல்விதுறைகளை ஒருங் கிணைந்து தனிக்கட்டடத்தில் இயங்க அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இச்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் கூறியுள்ளதாவது:ராமநாதபுரம் அரண் மனை கட்டத்தில் ஒருபகுதியில் இயங்கிய முதன்மை கல்வி அலுவலகம், தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நெருக்கடியில் செயல்படுகிறது. இங்கு ஆசிரியர்கள், மாணவர்கள் பலரின் ஆவணங்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிக்கப்படுகிறது. இந்த நிலைமையில் தற்போது தீ விபத்தில் ஆவணங்கள் எரிந்துள்ளது கவலை அளிக்கிறது. ராமநாதபுரம் தவிர்த்து பிற மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலகம், கல்வி அலு வலர்கள் உள்ளிட்டவை தனிக்கட்டடத்தில் கல்வித் துறை அலுவலங்களை ஒருங்கிணைந்து செயல் படுகிறது.இதேப்போல ராமநாதபுரத்திலும் கல்வித் துறை அலுவலகங்களுக்கு என்று தனி கட்டடம் வசதி ஏற்படுத்தி தர அரசு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.----