விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி நகர அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு நகர செயலாளர் பூர்ணராவ் தலைமை தாங்கினார். முத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அமைச்சர் சண்முகம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.கூட்டத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் வேலு, மாநில பொதுக்குழு லட்சுமிநாராயணன், மாவட்ட இணை செயலாளர் மலர்விழி, மாவட்ட பேரவை துணை தலைவர் ரமேஷ், நகர பேரவை செயலாளர் பலராமன், நகர துணை செயலாளர் கண்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் பிரகாஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் ஜாகீர் உசேன், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சங்கர், இளைஞரணி செயலாளர் வாசு, பாசறை செயலாளர் ஈஸ்வரன், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரபு, நகர தலைவர் விஜயகுமார், நிர்வாகிகள் முருகன், கிருஷ்ணன், கலியபெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனாரப்பன், செங்கேணி, பூவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.