வானூர்; வானூர் அருகே அரசு அனுமதியின்றி எம்-சாண்டு மணல் கடத்திய டிப்பர் லாரியை சுரங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.வானூர் அடுத்த திருவக்கரையில் இருந்து பெரும்பாக்கம் நோக்கி எம்-சாண்டு மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் புகார்கள் சென்றது. இதையடுத்து, சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சுந்தரராமன் தலைமையில் அதிகாரிகள், திருவக்கரை பஸ் நிலையம் அருகில் வாகன தணிக்கையில்ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த (டிஎன்.31.பிஎப்.0276) என்ற பதிவெண் கொண்ட டிப்பர் லாரியை மடக்கினர். அப்போது, டிரைவர் தப்பியோடிவிட்டார்.இதையடுத்து டிப்பர் லாரியை ஆய்வு செய்தபோது, அரசு அனுமதியின்றி 2 யூனிட் எம்.சாண்ட் கடத்தி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து, மணலுடன், டிப்பர் லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்து, வானூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து டிப்பர் லாரி யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.