விழுப்புரம்; ஹீரோ மோட்டார் நிறுவன சாாதனையை, விழுப்புரம் ஆர்.கே., மோட்டார்சில் கேக் வெட்டி கொண்டாடினர்.ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம், 10 கோடி வாகனங்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை, ஹீரோ மோட்டார்ஸ் டீலரான விழுப்புரம் ஆர்.கே., மோட்டார்ஸ் நிறுவனத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.நிகழ்ச்சிக்கு, ஆர்.கே., மோட்டார்ஸ் உரிமையாளர்கள் குபேரன், பாலமுருகன், கார்த்திகேயன் தலைமை தாங்கினர். இதில், ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் சாதனையை பாராட்டி, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.அப்போது, சர்வீஸ் பொறியாளர் தேவராஜ், மேலாளர்கள் பழனிவேல், ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.