தியாகதுருகம்; நிலத் தகராறில் விவசாயியை தாக்கிய 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர்.தியாகதுருகம் அடுத்த சூ. பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி மகன் முருகன், 49; விவசாயி.இவருக்கும் இவரின் அண்ணன் கோவிந்தனுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கோவிந்தனின் தூண்டுதலின் பேரில் அதே ஊரைச் சேர்ந்த கஞ்சமலை மகன் சுப்பிரமணியன், 45; முருகனுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட முயற்சி செய்துள்ளார்.இதை தடுக்க முயன்ற முருகனை சுப்பிரமணியன், கோவிந்தன் மற்றும் இவரது ஆதரவாளர்கள் 8 பேர் சேர்ந்து முருகனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து சுப்ரமணியன், ஏழுமலை, மணிகண்டன், அஜித், வினோத், சுப்பிரமணியன் மகன் கோவிந்தன், ராஜி மகன் கோவிந்தன், ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.