புவனகிரி; கீரப்பாளையம் அடுத்த வடஹரிராஜபுரம் பகுதிகளில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைத்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கீரப்பாளையம், வடஹரிராஜபுரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் சமீபத்தில் பெய்த மழையால் நீரில் மூழ்கின. தண்ணீர் வடியாததால், நெற்கதிர்கள் முளைத்துள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.இது குறித்து விவசாயி அருள் கூறுகையில் 'கடன் வாங்கி விவசாயம் செய்தோம். மழை நீர் சூழ்ந்துள்ளதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நெல் வயல்களில் முளைப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் கண்டு கொள்ளவில்லை. பாதிக்கப்பட்டுள்ள வயல்களில் முறைப்படி ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.