நடுவீரப்பட்டு; பாலுார் கடை வீதி பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பண்ருட்டியிலிருந்து பாலுார் வழியாக கடலுார் செல்லும் சாலையில் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், அதிகளவில் செல்கின்றன.இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது.மேலும், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்ல இந்த சாலையின் வழியாக சென்றால் குறைவான தொலைவு என்பதால் இந்த சாலையை வாகன ஓட்டிகள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் பாலுார் பகுதியில் மட்டும் சாலை ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும், கடைக்கு இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் தங்கள் வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்கின்றனர்.இதனால் இந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வரும் பகுதியில் பணிகளை விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.