கடலுாரில் பள்ளி, கல்லுாரிகள் திறந்தாச்சு பயன்பாட்டிற்கு வராத நடைபாதை மேம்பாலம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2021
05:50

கடலுார்; கடலுார் பாராதி சாலையில் புதிதாக கட்டப்பட்ட நடைபாதை மேம்பாலம் பூட்டிக்கிடப்பதால், மாணவிகள் ஆபத்தான நிலையில் சாலையை கடந்து செல்லும் நிலை நீடிக்கிறது.கடலுார், பாரதி சாலையையொட்டி, தனியார் பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இந்த சாலை எப்போதும் போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால், இதனை கடந்து செல்ல மாணவிகள் தினமும் மிகுந்த சிரமம் அடைந்தனர். மேலும் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் நடந்தன.அப்பகுதியில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதுநகர் காவல் நிலையம் எதிரே நடைபாதை மேம்பாலம் அமைக்க 2019ல் அப்போதைய எம்.பி., அருண்மொழித்தேவன், தனது தொகுதி நிதியில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.இதையடுத்து பொதுப்பணித் துறை சார்பில், 20 அடி உயரம், 8 அடி அகலம், 80 அடி நீளத்தில் இரும்பினால் ஆன நடை பாதை மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது.இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், நடைபாதை மேம்பாலமும் பூட்டப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கடந்த 19ம் தேதி முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் துவங்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் உள்ள பெண்கள் கல்லுாரியும் திறக்கப்பட்டுள்ளது.தினசரி ஆயிரக்கணக்கான மாணவிகள் பள்ளி, கல்லுாரிக்கு வந்து செல்வதால், கடலுார், பாரதி சாலை மீண்டும் பரபரப்பாகி உள்ளது. நடைபாதை மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு திறந்து விடாததால், மாணவிகள் ஆப்பான நிலையில் சாலையைக் கடக்கும் நிலை தொடர்கிறது.எனவே, நடைபாதை மேம்பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X