புதுச்சத்திரம்; குறிஞ்சிப்பாடி அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் பா.ஜ., கொடியேற்று விழா நடந்தது.நிகழ்ச்சிக்கு, பா.ஜ., பிரதம மந்திரி வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் துரை ராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் சிவனடி அருள், ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.கிழக்கு மாவட்ட மகளிரணி செயலாளர் ராதா துரைராமலிங்கம் கட்சிக்கொடியேற்றினார்.ஒன்றிய மகளிரணி தலைவி புவனேஸ்வரி, ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு தலைவர் இளங்கோவன், விவசாய அணி ஒன்றிய துணைத் தலைவர் நடராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.